ஜெயலலிதா பற்றிய சுவாரசியமான தகவல்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது, எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அதிமுக-வை வழிநடத்தி சென்றவர் ஜெயலலிதா.

கோடிக்கணக்கான மக்களின் மனதில் வீற்றிருந்த ஜெயலலிதாவை பற்றிய சுவாரசியமான தகவல்கள்,

சென்னையின் சர்ச்பார்க் பள்ளியில் கல்வி பயின்ற ஜெயலலிதா பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தெரிவானார்.

திரைப்படத்துறையை ஜெயலலிதா தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. குடும்ப சூழல் காரணமாக நடுப்புத் தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

13 வயதாக இருக்கும்போது ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஜெயலலிதா. அந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நாயகனாக நடித்துள்ளார்.

பாடசாலை மாணவியாக இருக்கும்போதே ஜெயலைதா பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தகுந்தது Tea House எனும் ஆங்கில நாடகம். இதன் பின்னர் The Epistle எனும் ஆங்கில படத்திலும் ஜெயலலிதா நடித்தார்.

கன்னட மொழியில் கதாநாயகியாக அறிமுகமான சின்னாத கொம்பே திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அப்போது அவருக்கு வயது வெறும் 15 தான்.

திரை உலகில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அவர் நடித்துள்ள 92 தமிழ் திரைப்படங்களில் 85 திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

தமிழில் முதன் முறையாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வமகன். நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.

ஜெயலலிதா அறிமுகமான 5 மொழி திரைப்படங்களும் பெரும் வெற்றி வெற்றவைகள். சின்னாட கொம்பே- கன்னட, மனஷுலு மமதுலு- தெலுங்கு, வெண்ணிற ஆடை- தமிழ், ஜீசஸ்- மலையாளம், இஸ்ஸாத்- இந்தி.

1/5

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments