முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

Report Print Arbin Arbin in இந்தியா

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். அவரது மறைவில் மிகவும் வருத்தம் கொள்வதாகவும் இந்திய அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் என தனது டுவிட்டரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments