போயஸ் கார்டன் வந்தது ஜெயலலிதா உடல்: கதறி அழும் தொண்டர்கள்- பொலிசார் திணறல்

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் உயிருடன் இருக்கும் போது பயன்படுத்தப்பட்ட கான்வாய்கள் இப்போது அவரது உடல் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்றன. அவர் வாழ்ந்த வீட்டில் ஜெயலலிதாவின் குலவழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

இதன் பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு செல்லப்படும். இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments