தமிழக மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டார் ஜெயலலிதா, இரும்பு பெண்மணி, சாதனை வீர மங்கை ஜெயலலிதா இன்று நம்முடன் இல்லை.
இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் வாயாடி என்றே செல்லமாக அழைப்பார், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் முதன்முதலாக எம்ஜிஆர்-டன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா.
மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் 28 படங்களில் இணைந்து நடித்தனர், படங்களில் நடிக்கும் போது ஜெயலலிதாவை வாயாடி என்றே எம்ஜிஆர் அழைப்பாராம்.