ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் வழக்கத்திற்கு மாறான இரு நிகழ்வுகள்!

Report Print Arbin Arbin in இந்தியா
5779Shares
5779Shares
ibctamil.com

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த ஈமச்சடங்கில் வழக்கத்திற்கு மாறான இரண்டு நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. முதலாவதாக ஜெயலலிதாவின் உடல் எரிப்பதற்கு பதிலாக புதைக்கப்பட்டுள்ளது. வைஷ்ணவிதே பிராமணிய முறைப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பது தான் வழக்கம். ஆனால் அதற்கு எதிராக உடல் புதைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயகுமார் இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார்.

இந்து முறைப்படி பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதற்கோ, செய்யும் இடத்திலே இருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

மாலை 6.05 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் சந்தனப்பேழையில் வைத்து புதைக்கப்பட்டது. வந்திருந்தவர்களில் பெரும்பாலும் எவரும் ஒப்பாரி வைத்து அழவில்லை.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் அஞ்சுலட்சுமி, தொலைக்காட்சி தம்பதிகளான கணேஷ்கர், ஆர்த்தி ஆகியோர் தவிர வேறு எவரும் பெரிதாக அழவில்லை.

மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நாடெங்கும் உள்ள தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments