அம்மா இல்லைங்க... ஆனா படு சூப்பரா வேலை நடக்குது! இது மக்கள் விமர்சனம்

Report Print Nivetha in இந்தியா

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது கடும் விமர்சனத்திற்குள்ளான தமிழக அரசு தற்போது வர்தா புயல் தாக்கத்தின்போது துரிதமாக செயல்பட்டு வருவதால் நல்ல பெயர் எடுத்துள்ளது.

எங்கே இந்த ஆண்டும் தத்தளிக்க விட்டுவிடுவார்களோ என்று அஞ்சிய மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அப்போது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக ஜெயலலிதா அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா புயல் சென்னையை சூறையாடியுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ். மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்குமாறு பன்னீர்செல்வம் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வர்தாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக தொண்டர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது சென்னை, காஞ்சீபுரத்தில் இருந்த நிலைமைக்கு தற்போது நேர் எதிராக உதவிகள் துரிதமாக கிடைக்கின்றது.

ஜெ. அரசு கடந்த ஆண்டோ அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை, வெள்ளம் ஏற்படவே அரசு தான் காரணம், ஜெயலலிதா என்ன செய்தார் என்று எல்லாம் விமர்சனம் எழுந்தது.

அமைச்சர்கள் 2015ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் அதிமுக அமைச்சர்கள் 4ம் திகதி தான் பார்வையிட வந்தனர். அதுவும் அரசை கடுமையாக விமர்சித்த பிறகே அமைச்சர்கள் வெளியே வந்தனர்.

துரித நடவடி்ககை வெள்ளத்தால் வீடுகளில் முடங்கிய பலர் குடிக்க நீர் கூட இல்லாமல் தவித்தனர்.

இந்த ஆண்டோ புயல் தாக்கும் இடங்களை தெரிந்து கொண்ட அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளும் உடனே துவங்கப்பட்டுள்ளது.

அம்மா கடந்த ஆண்டு அம்மா இருந்தே ஒன்றும் நடக்கவில்லை. இந்த ஆண்டு அம்மா வேறு இல்லை என்ன செய்யப்போகிறார்களோ என்று அலுத்துக் கொண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

எங்கே கடந்த ஆண்டை போன்று அரசு நம்மை தத்தளிக்க விட்டுவிடுமோ என்று அஞ்சிய மக்களுக்கு ஓ.பி.எஸ்.ஸின் துரித நடவடிக்கை நிம்மதி அளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments