நீங்கள் தான் எல்லாமே! சசிகலாவிடம் சரண்டர் ஆன சரத்குமார்

Report Print Fathima Fathima in இந்தியா

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்று நீ்ங்கள் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என சசிகலாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்.

அதிமுக தொண்டர்களால் அம்மா மிக அன்போடு அழைக்கப்படுபவர் ஜெயலலிதா.

இவர் மறைந்த பின்னர் இவரது தோழியான சசிகலாவை சின்னம்மா என அழைக்கத் தொடங்கிவிட்டனர், அதுமட்டுமில்லாமல் கட்சியை நீங்கள் தான் வழிநடத்தி செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தனது மனைவி ராதிகாவுடன் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் இறக்கவில்லை, நம்முடன் தான் இருக்கிறார்.

மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவர் விட்டுச் சென்ற பணியை அவருடன் அன்பு சகோதரியாக இருந்த சின்னம்மா அவர்கள் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக தோழர்களும், தோழமை கட்சியினரும் சின்னம்மா எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments