நிர்வாண பூஜையில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்கள்! காரணம் என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே ஐயப்ப பக்தர்கள் நிர்வாணமாக பூஜை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர் கடந்த 15 நாட்களாக நிர்வாணமாக பூஜை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணில் பாட்டில், க்ரிஷனே கவுடா, பிரகாஷ் கோகக் மற்றும் கங்காரம் ஆகியோர் மடக்கிஹொன்னஹள்ளி கிராமத்தில் உள்ள அய்யப்ப சிலைக்கு கடந்த 15 நாட்களாக நிர்வாண பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

48 நாட்கள் நிர்வாணமாக விரதம் இருந்து தினந்தோறும் மூன்று முறை குளிர்ந்த நீரில் குளித்து ஐந்து முறை தினமும் நிர்வாண நிலையில் ஐயப்பனுக்கு பூஜை செய்யும் பட்சத்தில் முக்தி கிட்டும் என அவர்கள் கூறினர்.

இந்த பூஜைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் பூஜையை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments