முதல்வர் பதவியும் வேண்டுமா? சசிகலா போஸ்டர்கள் மீது சாணம் வீச்சு

Report Print Jubilee Jubilee in இந்தியா

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைத் தொடர்ந்து சசிகலாவே முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழியான சசிகலா முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் ஆர்கே நகரில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என அவருக்கு ஆதரவாக உள்ள சில அதிமுகவினர் வலியுறுத்துகின்றனர்.

இந்த புதிய கோரிக்கையால் தென்மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

கம்பம் - குமுளி சாலையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பேனர்களில் சசிகலா படத்தின் மீது சாணத்தை சிலர் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா ஆதரவாளர்கள் பின்னர் தண்ணீர் ஊற்றி அதனை அகற்றினர்.

இதேபோல் திண்டுக்கல் நகரிலும் பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவிக்கும் சசிகலா குறி வைப்பதால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments