இறப்பதற்கு முன்னர் ஜெ.வுக்கு தரப்பட்ட உணவில் கலந்திருந்தது என்ன? அவிழும் மர்மம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் அடுத்த பொது செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

வரும் 29ஆம் திகதி நடைபெற இருக்கும் கட்சியின் பொதுகுழு கூட்டத்தில் சசிகலா பொது செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டுவரும் நிலையில், கட்சி மற்றும் ஆட்சியை ஆட்டுவிக்கும் பவர் சென்டராக யார் இருப்பது என்ற சண்டை சசிகலா குடும்பத்தில் தொடங்கியுள்ளது.

முக்கியமாக சசிகலா தம்பியான திவாகரனுக்கும், அவர் அக்காவின் மகனான தினகரனுக்கும் வெளிப்படையான மோதல் உருவாகியுள்ளது.

இதனிடையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை கூட இல்லாத சசிகலா எப்படி பொது செயலாளர் ஆக முடியும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சசிகலா புஷ்பா, தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வருகிறார்.

தற்போது, ஜெயலலிதாவுக்கு அப்பலோவில் சிகிச்சையளித்த மருத்துவர் பேசிய ஓடியோ மற்றும் ஐதராபாத்திலிருந்து அப்பலோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் ஆகியவை பற்றிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போகிறாராம் சசிகலா புஷ்பா.

அதுமட்டுமில்லாமல், ஜெயலலிதா இறக்கும் முன்னர் அவருக்கு கோவில் பிரசாதம் என கொடுக்கப்பட்ட உணவு மற்றும் தீர்த்தம் பற்றிய ரகசியங்களையும் இவர் வெளியிடபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments