ராமமோகன் ராவ் ஊழலுக்கு மூலகாரணமே சசிகலா தான்! கொந்தளித்த சீமான்

Report Print Raju Raju in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடந்த ரெய்டில் பல கோடி ரூபாய்களும், தங்கங்களும் சிக்கியுள்ளன.

அவரின் மொத்த சொத்து மதிப்பு 70 ஆயிரம் கோடி என்கிறார்கள். அவர் மீது சொத்து சேர்ப்பது, லஞ்ச ஊழலில் ஈடுபட்டது போன்றவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் இவ்வளவு பணத்தை யார் துணையின்றி எப்படி கொள்ளையடித்திருக்க முடியும்?

இந்திய பட்ஜெட் பணத்தை விட அவர் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது என்றால் யார் காரணம்?

ராமமோகன் ராவ் வீட்டில் சேர்க்கப்பட்ட பணம் பற்றி அப்போது நிர்வாகத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கும், போயஸ் கார்டன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த சசிகலாவுக்கும் தெரியாமலா இருந்திருக்கும்?

அப்படியென்றால் இவர்களும் தான் ஊழலுக்கு துணை போயுள்ளார்கள் என அர்த்தம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments