என்னை பொதுச்செயலாளர் ஆக்குங்கள்! கருணாநிதியின் வைரல் கடிதம்

Report Print Aravinth in இந்தியா

47 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கருணாநிதி திமுக-வினரிடம் ஆதரவு கேட்டு கைப்பட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

திராவிட கழகத்திலிருந்து வெளியேறி அறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி தான் திராவிர முன்னேற்ற கழகம்.

அப்போது அவர், நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவன் தான். அவர் பெரியார் மட்டும் தான்.

அதனால் திமுகவில் தலைவர் நாற்காலி என்றும் காலியாக இருக்கும் என கூறிய அவர் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது அனைத்து அதிகாரங்களும் பொதுச் செயலாளரிடம் தான் இருந்தது.

இதற்கிடையில் 3.2.1969 அன்று அப்போதைய பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா மறைந்ததையடுத்து, நாவலர் நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அப்போது திமுக பொருளாராக இருந்த கருணாநிதி எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பை ஏற்றார்.

ஆனாலும், என்ன பயன் கட்சியின் அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் பதவி நாவலர் வசம் இருக்கிறதே.

இதனால் இரட்டை அதிகார மையம் போன்ற ஒரு நிலை ஏற்பட்டுகிறதே என்று கருதிய கருணாநிதி இதை சமாளிக்க ஒரு புத்திசாலிதனமான யோசனையை மேற்கொண்டார்.

அதாவது, பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டு அதற்கு தானே போட்டியிட எண்ணியுள்ளார்.

அந்த சமயத்தில் திமுக கட்சியினரிடம் ஆதரவு கேட்டு எழுதிய கடிதம் தான் இது.

வணக்கம். அன்புசால் நண்பருக்கு, 27.7.69 நடைபெறும் நமது திமுக தலைமைக் கழக தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வேட்பாளராக நிற்கிறேன். ஒன்று பட்டுப் பழகிய இதயங்களுக்கு எந்த விரிவான விளக்கமும் தேவையில்லை.

என்றும் போல் தொடர்ந்து தொண்டாற்ற கடமைப்பட்டவன் நான். என்னைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். - இப்படிக்கு அன்பு மறவாத மு.கருணாநிதி’ - என உண்ணதமான சொற்களால் மிகவும் சுருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி.

மேலும், இந்த பொதுச் செயலாளர் பதவிக்கு நாவலர் நெடுஞ்செலியனும் போட்டியிட களமிறங்கவே கட்சிக்குள் கழகம் ஏற்பட்டு விடுமோ என்ரு அஞ்சிய மூத்த நிர்வாகிகள் கருணாநிதியை சமாதானப்படுத்த தொடங்கினர்.

அப்போது, சமாதானமான கருணாநிதி மிகவும் புத்திசாலி தனமாக யோசித்து பொதுச் செயலாளர் பதவியை நாவலருக்கு விட்டுத் தருவதாக இருந்தால் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அதில் தன்னை அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, கட்சியில் அனைவரிடமும் ஒப்புதல் பெறப்பட்டு கருணாநிதி கட்சித் தலைவராகவும், நாவலர் பொதுச் செயலாளராகவும் ஆனார்கள்.

இந்நிலையில், தலைவராக பொறுப்பேற்ற உடனேயே பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு தலைவருக்கு சிறப்பு அதிகாரங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்ட திட்டங்கள் திமுக-வில் இன்றளவும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments