ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Santhan in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார்.

அவரைத் தொடர்ந்து அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் சசிகலா நடராஜன் அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் மகசேசே விருது ஆகியவை கிடைக்க வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டப்பதாக கூறப்படுகிறது.

அதேபோன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களுடைய பிறந்தநாளான டிசம்பர் 23ஆம் திகதியே தேசிய விவசாயிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உண்மையான விவசாயி யாகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடக்கூடியத் தலைவராகவும் விளங்கியவர் சரண்சிங்.

அவர் பெயரில் ஏற்கனவே இது கடைப்பிடித்து வரும் நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இது போன்ற தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, விவசாயிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், இறந்தவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை, இதனால் தான் மகாத்மா காந்திக்கு கூட நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

மேலும் இது அதிமுக-நிர்வாகிகளின் அறியாமையை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments