சென்னையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை

Report Print Jubilee Jubilee in இந்தியா

சென்னைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை தாக்கிய மர்ம நபர்கள் அவரிடம் இருந்து பணம், மொபைல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டு பெண் ஒருவர் சென்னை மகாபலிபுரம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் தனியாக இருப்பதை உணர்ந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன் பின்னர் அவர் அங்கிருந்த காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் Ksenija Murali எனவும், அந்த பையில் 1400 யூரோ, 250 டொலர், ரூ.1000, மொபல், பாஸ்போர்ட் ஆகியவை இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மகாபலிபுரம் பொலிசார் உதவியுடன் டெல்லியில் உள்ள ஸ்லோவேனியா நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்ட அந்த பெண் நாடு திரும்புவதற்காக உதவி கோரியுள்ளார்.

சுற்றுலா பயணிகள் நிறைந்த இடத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments