இனிமேல் சின்னம்மா தான்: அம்மா படத்துக்கு டாடா காட்டிய அதிமுக நிர்வாகிகள்

Report Print Jubilee Jubilee in இந்தியா

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலாவின் புகைப்படத்தை சட்டைப் பாக்கெட்டில் வைத்து ஆரவாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று அதிமுகவில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதன் படி இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

இதில் சசிகலாவை அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக நியமித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் போயஸ் கார்டனில் திரண்ட அதிமுக ஆதரவாளர்கள் அவரது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பதிலாக பெரிய அளவிலான சசிகலாவின் பிகைப்படத்தை வைத்திருந்தனர்.

அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் சிறியதாகவும், சசிகலாவின் புகைப்படம் பெரிதாவும் அச்சிட்டுள்ளனர். அதை சசிகலாவிடன் காட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments