கொலைவெறி தாக்குதலுக்குள்ளான சசிகலா புஷ்பாவின் கணவர் என்ன ஆனார்? அம்பலமான தகவல்

Report Print Jubilee Jubilee in இந்தியா

எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகன் நேற்று இரவு முழுக்க பொலிஸ் பிடியில் இருந்தது ஆட்கொணர்வு மனு மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. ஆனால் சசிகலா புஷ்பா வரவில்லை. அவருடைய கணவர் லிங்கேஸ்வரன் திலகன் ஒரு ஆவணத்துடன் வந்தார்.

இதைப் பார்த்த அதிமுகவினர் சிலர் அவரை கடுமையாக தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைபட்டது. ரத்த வெள்ளத்தில் அவரை பொலிசார் இழுத்து சென்றனர்.

இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயன்றதாக அவர் மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

அதே சமயம் பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்ட லிங்கேஸ்வரன் எங்கு இருக்கிறார் என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு சசிகலா புஷ்பா சார்பில் அவரது வக்கீல்கள் அவசர ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று காலை உயர்நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, லிங்கேஷ்வரனை நேற்று பொலிசார் கைது செய்ததாகவும், இன்று காலை 9.30 மணியளவில் ஜாமீனில் விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அவரை வெளியில் விட்டால், ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அவரை பொலிசார் பிடித்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவல் நிலையத்தில் வைத்து லின்கேஷ்வரன் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் கோபத்துடன் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments