பிரதமர் மோடியுடன் ஜெ. அண்ணன் மகள் தீபா சந்திப்பு?

Report Print Arbin Arbin in இந்தியா

சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு தெரிவு செய்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்திய பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்; போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.

சசிகலாவை பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்த நிலையில், தீபாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, அவரை பிரதமர் மோடியை சந்திக்க வைக்க தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து தீபா எந்த நேரமும் பிரதமர் மோடியை சந்திக்கக்கூடும் என செய்திகள் பரவின. தீபாவும் தாம் மோடியை சந்திக்க விரும்புவதாகவும், அழைப்பு வந்தால், எந்த நேரமும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறி வந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு தரப்பிலும் ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து தீவிர கவனம் செலுத்துவது போல வெளியே தெரிந்தால், மக்கள் மத்தியில் பா.ஜ., அரசு மீது கோபம் ஏற்படலாம்.

அதனால், தமிழகத்தில் சசிகலாவுக்கு எதிராக இருக்கும் சிலரை இப்போதைக்கு சந்திப்பதைத் தவிர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே, தமிழகத்தில் இருந்து சிலர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி அப்பாயின்மெண்ட் கேட்டதும் இப்போதைக்கு இல்லை என பிரதமர் மோடிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments