அலங்கா'நல்லூர்' ஆடும் வரை, ஈழ'நல்லூர்' அடங்காது? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்தில் இளைஞர்கள் போராட்டம்

Report Print Basu in இந்தியா

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி இலங்கையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களில் மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையில் இளைஞர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதில் இளைஞர்கள் அதிகமானோர் வேட்டி கருப்பு மேலாடை அணிந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதாகை ஒன்றில் அலங்கா'நல்லூர்' ஆடும் வரை, ஈழ'நல்லூர்' அடங்காது?? என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments