கலவரத்திற்கு பொலிஸ் தான் காரணம்? வெளியான மற்றொரு ஆதாரம்! திடுக்கிடும் வீடியோ காட்சிகள்

Report Print Fathima Fathima in இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. இதற்கு சமூக விரோதிகளே காரணம் என்றும், பொலிசின் சூழ்ச்சியே இது எனவும் கூறப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளே ஆட்டோ, வாகனங்களுக்கு தீ வைக்கும் வீடியோக்களும் வெளியாகின.

இந்நிலையில் செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது, பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் என்பவரது கமெரா லென்ஸை பொலிஸ் அதிகாரி ஒருவர் உடைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், உயரதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே தாம் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் வைத்திருந்த கற்களை வீடியோ எடுத்த போதே அவர்கள் தாக்க முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கெல்லாம் வீடியோ எடுக்க கூடாது என மிரட்டல் விடுத்ததுடன், வீடியோவை உடனடியாக அழித்து விடுமாறும் கூறியுள்ளனர்.

அவர்களது ஒரே நோக்கம் வீடியோ அழிப்பதிலேயே இருந்தது என்றும், தம்மை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்துவிட பொலிசார் திட்டமிட்டிருக்கலாம், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாததால், அத்துமீறி நுழையும் போராட்டக்காரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments