எம்ஜிஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்... கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் போராட்டகளத்தில் வந்திருப்பார் என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமூக விரோதிகளின் வன்முறையாலும், பொலிஸ் அடிதடியாலும் நேற்று தமிழகமே போர்க்களமானது.

காலை முதலே போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக டுவிட் செய்த நடிகர் கமல்ஹாசன், ஆட்டோவை பொலிஸ் அதிகாரி கொளுத்துவது போன்ற வீடியோவையும் ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்கமாட்டார், அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார்.

எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது.

போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள், உண்மையை யாராலும் மறைக்கமுடியாது, அதிருப்தியின் அடையாளம்தான் போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments