ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொலிஸ் செய்தது என்ன? கலங்கிய கண்களுடன் அரசு ஊழியர்

Report Print Raju Raju in இந்தியா
285Shares
285Shares
lankasrimarket.com

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் கடைசி நாளில் வன்முறை வெடித்தது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் அப்பாவி இளைஞர்கள் பலரும் அவதிக்குள்ளானார்கள், அதில் ஒருவர் தான் பிரேம்நாத் என்னும் இளைஞர்.

சென்னை மைலாபூரில் உள்ள இரயில் நிலையத்தில் பிரேம்நாத் TTR ஆக பணி பரிந்து வருகிறார்.

அவர் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று என் வீட்டின் வாசலில் ஒரே அடிதடி சத்தம் கேட்டது. நான் வெளியில் சென்று என்னவென்று பார்த்தேன்.

அதற்குள் நானும் அந்த இளைஞர்களின் கூட்டத்தை சேர்ந்தவன் என நினைத்த பொலிசார் என் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். நான் இந்த கூட்டத்தை சேர்ந்தவன் இல்லை எனவும் TTRராக இருப்பதாகவும் கூறினேன்.

ஆனால் அவர்கள் அதை நம்பாமல் அடித்ததில் என் கை உடைந்துவிட்டது, மேலும் என்னை சிறையிலும் அவர்கள் ஒருவாரம் அடைத்தார்கள், அங்கு எனக்கு உணவு கூட சரியாக தரவில்லை என அவர் கூறியுள்ளார்.

தன் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 12 வழக்கை பதிவு செய்ததாக கூறும் பிரேம்நாத் பின்னர் ஒரு வாரம் கழித்து சிறையிலிருந்து பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2001லிருந்து 2009 வரை நடைபெற்ற நீச்சல் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ள அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் முக்கிய நீச்சல் போட்டி உள்ளது.

ஆனால் பொலிசார் தாக்கியதில் கையில் கட்டுடன் இருக்கும் அவர் நீச்சல் போட்டியில் தன்னால் கலந்து கொள்ள முடியுமா என தெரியவில்லை என கவலையுடன் கூறுகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments