ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பொலிஸ்: விசாரணையில் உயர் அதிகாரிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
109Shares
109Shares
lankasrimarket.com

சென்னையில் பொலிஸ் ஒருவர் ரூ.1 கோடி பழைய ரூபாயை நோட்டுகளை மாற்றிக்கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

அண்ணாநகர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையம் ஒன்றில் சட்டம்-ஒழுங்கு பொலிசாக இருக்கும் அவர் தனது உறவினர் ஒருவர் மூலமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்து வந்துள்ளார்.

இதனை நம்பி தொழில் அதிபர் ஒருவர் அவரிடம் ரூ.1 கோடியை கொடுத்துள்ளார். அதில் ரூ.64 லட்சத்தை மாற்றி கொடுத்து விட்டார்.

மீதி ரூ.36 லட்சம் பணத்தை மாற்றிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட தொழில் அதிபர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார்.

இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முதல் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments