முதல்வராக திகதி குறித்த சசிகலா.. பரிதாப நிலையில் ஓபிஎஸ்: செக் வைக்க தயாரான மோடி அரசு!

Report Print Jubilee Jubilee in இந்தியா
900Shares
900Shares
lankasrimarket.com

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா முதல்வராக முடிவு செய்துள்ள நிலையில் அவரின் முயற்சியை தடுக்கும் வேளைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தான் முதல்வராக வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் சசிகலா.

முதல்வர் பதவியேற்பதற்காக பெப்ரவரி 8 அல்லது 9ம் திகதியை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம் சசிகலா.

வழக்குகளை காரணம் காட்டி முதல்வராக இருந்த என சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் தற்போது விலகிக் கொள்ள முதல்வர் நாற்காலியில் அமர தீவிரம்காட்டி வருகிறார் சசிகலா.

சசிகலாவின் இந்த தீவிர முயற்சியைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நேரில் வந்து கடிதம் கொடுத்தால் மட்டுமே ஏற்க வேண்டும்.

பேக்ஸ் மூலமாகவோ அல்லது வேறு நபர்களோ கடிதம் வந்து கொடுத்தால் அதை ஏற்கவே கூடாது என உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாம்.

இதுதவிர, சசிகலா தொடர்பான வழக்கு விவகாரங்களிலும் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments