போயஸ் கார்டனில் விரட்டியடிக்கப்படும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

போயஸ் கார்டனுக்கு வரும் ஜெயலிலிதாவின் விசுவாசிகள் விரட்டியடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வசித்து வருவதால், ஜெயலலிதாவுக்கு அளித்தது போல பொலிசார் பாதுகாப்பு அளித்து வந்தனர்.

சசிகலா அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டதும் போயஸ் கார்டனில் மீண்டும் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை முதல்வர் பதவிக்கு சசிகலா தெரிவு செய்யப்பட்டதால், போயஸ்கார்டனில் அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பொலிசாரின் பல கட்ட சோதனைக்கு பிறகே, போயஸ்கார்டன் இல்லத்தை எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை காண வரும் அவரது விசுவாசிகள், தொண்டர்கள் துரத்தி அடிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments