ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தினோம்...ஆனால்! மருத்துவர்கள் விளக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழு விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு கடந்த 75 நாட்களாக அப்பல்லோவில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி காலமானார்.

இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழு விளக்கம் அளித்துள்ளது.

ICU-ல் இருப்பவரை புகைப்படம் எடுக்க முடியுமா?

ரிச்சர்டு பீலே கூறுகையில், நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறலால் ஜெயலலிதா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.

நோய்த்தொற்று அவரது இதயம் வரை பரவி இருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சசிகலாவிடம் தெரிவித்து வந்தோம்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா இல்லை, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஒருவரை புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழக அரசே அழைத்து விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டதால் தான் விளக்கம் அளிப்பதாகவும், வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும் நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கால்களை அகற்றவில்லை

மருத்துவர் பாலாஜி கூறுகையில், ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.

சட்டமன்ற இடைத்தேர்தலின் போது ஜெயலலிதாவின் சம்மதத்தின் பேரிலேயே அவரது கைரேகை பெறப்பட்டது, இரண்டாவது முறையாக ஆளுநர் அப்பல்லோ வந்த போது கண்ணாடி வழியாக முதல்வரை பார்த்தார்.

மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒருவாரத்தில் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தினோம்

மருத்துவர் சுதா சேஷயன் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே.

டிசம்பர் 5-ம் திகதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்கு எம்பாமிங் எனப்படும் பதப்படுத்தப்படுத்துதல் நடைபெற்றது.

உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவர்கள் மறைவுக்குப் பின் அவர்களது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதற்காக எம்பாம்பிங் செய்யப்படுவது வழக்கம்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் கூட இதுபோல் எம்பாம்பிங் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments