சசிகலா தமிழகத்தை ஆள்வார்: 20 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த வலம்புரிஜான்

Report Print Fathima Fathima in இந்தியா

பிரபல ஜோதிடரும், தயாரிப்பாளரும், ஜெயலலிதாவின் ஆரம்பகால நெருங்கிய நண்பருமான வலம்புரிஜான் 20 ஆண்டுகளுக்கு முன்பே சசிகலா ஒருநாள் முதல்வர் ஆவார் என கணித்துக் கூறியுள்ளார்.

1990ம் ஆண்டுகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா இந்த மூன்று பேருக்கும் இடையிலான முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் பிரபல வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதியுள்ளார்.

அதன் ஒருபகுதியிலிருந்து,

ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறோம்.

ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை.

திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார்.

ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும். அது சசிகலா முதல்வராகும் நாள்!...

நான் இதை சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம்.

ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல் அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார்.

அதற்கான பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார்.

தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments