தமிழக அரசின் மது விற்பனையில் நேரடி பலன் பெற்ற சசிகலா! வெளியானது ஆதாரங்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மது விறபனையில் சசிகலா நேரடியாக ஆதாயம் பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் வெளியான நிலையில் அவர் முதல்வர் பொறுப்பேற்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர் செல்வம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்திய நிலையில் தமிழக அரசியல் களம் மீண்டும் கொதி நிலையை எட்டியுள்ளது.

இதனிடையே சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் அரசு முன்னெடுத்து நடத்தும் தொழில்களில் நேரடி ஆதாயம் பெற்றதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு முதலமைச்சர் எப்படி அரசின் தொழில்களில் நேரடியாக ஆதாயம் பெற முடியும் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

முதலில் மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து சசிகலா ஆதாயம் பெறுகிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்ததுண்டு. ஆனால் வெளியான ஆவணங்களில் இருந்து குறித்த நிறுவனத்தில் மட்டுமல்ல, மேலும் பல நிறுவனங்களில் இருந்து சசிகலா நேரிடையாக ஆதாயம் பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு Hot Wheels Engineering Pvt Ltd என்ற தங்கள் நிறுவனத்தை சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் கொண்ட பொறுப்பாளர்கள் இணைந்து Jazz Cinemas Pvt Ltd என மற்றி தற்போது திரைப்படத்துறையில் கால்பதித்துள்ளனர்.

இதில் பெரும்பாலான பங்கை கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே சசிகலா தனது பெயரில் வைத்துள்ளார். இதேபோன்று Midas Golden distilleries என்ற நிறுவனத்தில் இருந்தும் சசிகலா பலன் அனுபவித்து வருகிறார். கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் Midas Golden distilleries வழியாக அரசிடம் இருந்து ரூ.2770 கோடி வருவாயாக ஈட்டியுள்ளனர் சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பல்.

சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க நேர்ந்தால், அரசு சட்ட திட்டங்களின் அடிப்படையில் குறித்த நிறுவனங்களின் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்து கொண்டாலும் அவரது உறவினர்கள் வருவாய் ஈட்டுவது தொடரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments