ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் என்ன? ஓபிஎஸ் அதிரடி விளக்கம்

Report Print Basu in இந்தியா

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த முதல்வர் ஓபிஎஸ் விளக்கமாக விவரித்துள்ளார்.

சசிகலாவிற்கு எதிராக போர் கொடி தூக்கிய முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அதிரடியாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது. ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுடைய மனநிலையில் இன்றைக்கு சில கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

ஏழை எளிய மக்களிடம் ஜெயலலிதாவை பற்றி அவருடைய மருத்துவ முறைகளை பற்றி சில சந்தேகங்கள் இருந்தது. அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட காரணம் யாராலும் யூகிக்க முடியவில்லை.

அந்த சந்தேகங்களை போக்குகின்ற பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம். தனிப்பட்ட வகையில் ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments