சசிகலா பேருந்திலிருந்து தப்பித்து ஓபிஎஸ் வீட்டிற்க்குள் ஓடிய எம்எல்ஏ! கதறிய மனனார்குடி கோஷ்டி

Report Print Basu in இந்தியா

அதிமுக எம்எல்ஏ ஒருவர் சசிலாவிடமிருந்து தப்பித்து ஓபிஎஸ் வீட்டுக்குள் ஓடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிமுக எம்எல்ஏ சண்முகநாதனே இவ்வாறு ஓபிஎஸ்யிடம் தஞ்சமடைந்துள்ளார்.

நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலையகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர், அனைத்து எம்எல்ஏக்களும் பேருந்தில் சிறை வைக்கப்பட்டனர்.

பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு எம்எல்ஏக்களுடன் பேருந்து சென்றது.

கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸின் வீடும் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி வீட்டிற்குள் செல்வதற்காக பேருந்து நின்றது. அதிலிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உள்ளே சென்றனர்.

அப்போது எம்எல்ஏ சண்முகநாதன் அங்கிருந்தவர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு யாருக்கும் தெரியாமல் ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனால், மன்னார்குடி கோஷ்டி கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments