அதிமுக உடைந்தது: ஓபிஎஸ்-க்கு மதுசூதனன் ஆதரவு

Report Print Fathima Fathima in இந்தியா

முதல்வர் பன்னீர்செல்வத்தை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 7ம் திகதி இரவு ஜெயலலிதா சமாதிக்கு வந்து 40 நிமிடங்களுக்கும் மேலாக மௌன அஞ்சலி செலுத்திய முதல்வர் பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டியை அளித்தார்.

அதில் தன்னை வற்புறுத்தியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் எனவும் தெரிவித்தார்.

சட்டசபையில் தனக்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் என உறுதியளித்தார்.

இந்நிலையில் தங்களுக்கு ஆதரவான எம்எல்ஏ-க்களை சசிகலா தரப்பு சிறைவைத்துள்ளது, இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வரவிருப்பதால் யார் முதல்வர் பதவியை ஏற்பார்கள் என்பது தெரியவரும்.

இதற்கிடையே முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு வந்த அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு அளித்துள்ளது பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மன்னார்குடி கோஷ்டி பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், பன்னீர்செல்வமும், மதுசூதனனும் இணைந்துள்ளதால் அதிமுக உடைவது உறுதியாகிவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments