பன்னீர் செல்வம் முதல்வராக இருப்பதில் என்ன பிரச்சனை? நடிகை கௌதமி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக தொடர்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது என நடிகை கௌதமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மாவே அடையாளம் காண்பித்துக் கொடுத்தவர்தான் ஓ.பி.எஸ். அம்மா மேல வச்சிருக்கிற மதிப்பு அவர் சொன்ன விஷயத்திலும் இருக்கணும். அவங்ளோட எதிர்பார்ப்புக்கும், கொள்கைளுக்கும் ஓ.பி.எஸ். கட்டுப்பட்டிருக்கிறார்.

ஒரு முறை இல்ல, இருமுறை அம்மா ஓ.பி.எஸ். கிட்ட முதல்வர் பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அப்படியிருக்கும் போது அவர் முதல்வராக தொடர்வதில் என்ன பிரச்னை.

இதெல்லாம் எல்லாருக்குள்ளேயும் சாதாரணமா எழும் கேள்விகள் தான். மக்கள் உரிமைகள் மதிக்கப்படணும்.

அதற்கான பொறுப்பை அரசு எடுத்துக்கணும். எப்பவும் மக்களை குழப்பத்தோடவே வச்சிருப்பதற்கு பேர் ஜனநாயம் இல்லை என்று நடிகை கௌதமி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments