தொடரும் நெருக்கடி: சசிகலா மீது காவல்துறை தலைவரிடம் புகார் மனு!

Report Print Arbin Arbin in இந்தியா

அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக காவல்துறை தலைவரிடம் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றினார் அவரது தோழியான சசிகலா.

தற்போது முதலமைச்சர் பொறுப்புக்கும் வர வேண்டும் என நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஆனால் சசிகலா முதலமைச்சர் ஆவதை பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விரும்பவில்லை.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் தமிழக காவல்துறை தலைவரிடம் சசிகலா மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த 20 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்ரமித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்ற துடித்து வரும் சசிகலாவுக்கு வழக்குகளும், புகார்களும் அடுத்தடுத்து வரிசை கட்டுவது சிக்கலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments