சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டுகள் சிறை உறுதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சசிகலா நடராஜன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என உச்சநீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் இன்று மாலைக்குள் சரணடைய வேண்டும் என் உச்சநீதின்றம் அறிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என உச்சநீதின்றம் அறிவித்துள்ளது.

முதல் இணைப்பு- இன்று காலை வெளியாகிறது தீர்ப்பு?

சசிகலா நடராஜன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்புதான் முதல்வர் பதவியை சசிகலா ஏற்க முடியுமா என்பதை தீர்மானிக்கும் என்பதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலா இந்த தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார். அவரது முதல்வர் கனவு நிறைவேறுமா என்பது இன்று தெரிய வரும் .

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த 2015 யூன் 23ம் திகதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2015 பிப்ரவரி 23ம் தொடங்கி இறுதி வாதம் நடைபெற்றது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதிட்டனர்.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் 4 நாட்களும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே 4 நாட்களும் வாதிட்டனர். வழக்கின் இறுதி வாதம் மட்டும் 17 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments