18 வயது பெண்ணை மணக்க முயன்ற கணவன்: நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய முதல் மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை நடுரோட்டில் வைத்து முதல் மனைவி வெளுத்து வாங்கியுள்ளார்.

பஞ்சாபை சேர்ந்த சோனு (42) என்பவருக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ராக்கி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் பிரபல ஹொட்டலில் வைத்து 18 வயது பெண்ணை சோனு இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார்.

இதனை அறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சென்று சோனுவிடம் சண்டையிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் ராக்கியை யாரென்றே எனக்கு தெரியாது என சோனு கூற, கோபமடைந்த ராக்கி தனது கணவனின் சட்டையை இழுத்து பிடித்து அடித்துள்ளார்.

மேலும் உறவினர்களும் சேர்ந்து நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளனர். என்னை விவாகரத்து செய்துகொள்ளாமல், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார் என்றும் அவர் மீது பொலிசில் புகார் தெரிவிக்கவிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments