திமுக ஆட்சியிலும் கோடிகள் குவித்த சசிகலாவின் மதுபான ஆலை: வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Arbin Arbin in இந்தியா

சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை திமுக ஆட்சியிலும் கோடிகள் குவித்துள்ளதை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதம் போட்டுடைத்துள்ளார்.

சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை சரக்குகள் அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல திமுக ஆட்சியிலும் அமோகமாக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளன.

மிடாஸ் மதுபான ஆலை கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ20,000 கோடி அளவுக்கு சம்பாதித்திருப்பதாக ஒ.பி.எஸ் அணியிலிருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி மிடாஸ் மதுபானங்களை சசிகலா விற்பனை செய்து வந்ததையும் விஸ்வநாதன் போட்டுடைத்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சசிகலா புஷ்பாவால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார் சசிகலா.

அப்போது அப்பல்லோ மருத்துவமனைக்கு ராசாத்தி அம்மாளை வரவழைத்து ஜாதி ரீதியாக சசிகலா புஷ்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்த சொன்னவரும் சசிகலாதான் என்பதையும் வெளிப்படுத்திய நத்தம் விஸ்வநாதன், சசிகலா மிடாஸ் மதுபான ஆலை நடத்துவதை ஜெயலலிதா ஒருபோதும் விரும்பியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments