பாத்திமா பாபு, லதா ஆகியோர் பத்தினி தெய்வங்கள்: நாஞ்சில் சம்பத் அதிரடி

Report Print Basu in இந்தியா

அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதவில், பாபு , லதா ஆகியோரை பத்தினி தெய்வங்கள் என அவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் திட்டம் கழக ஆட்சியை கவிழ்ப்பது அல்லது மு.க.ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது அதுவும் முடியாவிட்டால் தேர்தலுக்கு வழிகாணுவது, இந்த சதி திட்டத்திற்கு சப்பைக்கட்டு கட்ட இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார் தப்பாட்டம் ஆடுகிறார் பாத்திமா பாபு , லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது.

ஆனால் பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து அரசு வீட்டில் இருந்துகொண்டு அரசியலில் காணாமல் போன ஆட்களையும் காலாவதியான தலைவர்களையும் சில தேவையற்ற கூடுதல் சுமைகளையும் அரசு வீட்டில் கூட்டி வைத்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார்.

பன்னீர் செல்வத்துக்கு மானமும் மரியாதையும் இருக்குமானால் அரசு வீட்டை காலி செய்து விட்டு அரசைப் பற்றி பேச வேண்டும் அரசு வீட்டில் இருந்துக் கொண்டே ஆபத்தான விளையாட்டை விளையாடுவது ஆரோக்கியமானது அல்ல என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments