திருமணத்திற்கு விடுமுறை மறுப்பு: ரயில்வே காவலர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

மராட்டிய மாநிலம் மும்பையில் திருமணத்திற்கு போதிய விடுப்பு அளிக்க மறுத்ததை தொடர்ந்து ரயில்வே காவலர் ஒருவர் தமது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மத்திய ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் தல்வீர் சிங். இவருக்கு எதிர்வரும் வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இதனால் தன் பாதுகாப்பு பணி மேலாளரிடம் திருமணத்திற்காக விடுமுறை வேண்டும் என கேட்டிருந்தார்.

ஆனால் அந்த மேலாளர் விடுமுறை அளிப்பது குறித்து எந்த முடிவும் தெரிவிக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது நச்சரிப்பு தாங்காமல் இறுதியில் திருமணத்திற்கு 5 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தல்வீர் தனது வீட்டாருடன் மிகவும் மனமுடைந்த நிலையில் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று தன் தோளில் தொங்க விட்டிருந்த துப்பாக்கியால் மார்பில் அழுத்தி சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கியின் குண்டு தல்வீரின் மார்பில் பாய்ந்து அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக தல்வீரை மருத்துவமனைக்கு எடுத்து வந்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ரயில்வே காவலரின் மரணம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது மட்டுமின்றி உரிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments