நடிகர்களை சந்தித்த டிடிவி தினகரன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம் உட்பட நட்சத்திர பேச்சாளர்களும் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பொதுக்கூட்டங்களில் ஆற்றவேண்டிய உரைகள் குறித்த ஆலோசனையை அவர்களுக்கு, தினகரன் வழங்கியுள்ளார்.

நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் அனிதா குப்புசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரிதீஷ், கட்சியின் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் கௌரி சங்கரன், அரியலூர் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments