ஆர்.கே.நகரில் பாரதீய ஜனதா சார்பில் நடிகை கௌதமி?

Report Print Basu in இந்தியா

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் திகதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதன்முதலில் கோரிக்கை வைத்த நடிகை கௌதமி பாரதீய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது அல்லது இசையமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தே.மு.தி.க வேட்பாளராக வடசென்னை மா.செ. மதிவாணன் களமிறக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் முடிவு இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் அவர் போட்டியிடவில்லை என்றால் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதாவை களம் இறக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. திமுக சார்பில் இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments