தமிழகத்தின் புதிய ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா?

Report Print Arbin Arbin in இந்தியா

முன்னாள் கர்நாடக மாநில முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு, அவருக்கு தமிழக ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

அதன் அடிப்படையில் விரைவிலேயே தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது.

எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தபோது, காவிரி நீர் பிரச்னையை சிறப்பாக கையாண்டவர் என்பதால் இவரே தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments