காதலனுடன் ஓட்டமெடுத்த பள்ளி மாணவி: விசாரணையில் நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மீது பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் பதினோராவது வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி அவர் திடீரேன வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

பின்னர் இது குறித்து பொலிசில் புகார் செய்யபட பொலிசார் சிறுமி வசிக்கும் பகுதியில் இருக்கும் பாரதி (25) என்ற இளைஞரை சிறுமி காதலித்து வந்ததை கண்டு பிடித்தனர்.

மேலும், பட்டாபிராமில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்த பொலிசார் சிறுமியை மீட்டனர். பாரதியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாரதி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments