மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்: பரபரப்பு வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மதுக்கடையை அடித்து நொறுக்கி மதுவை தீயிட்டு கொளுத்திய பெண்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அங்கிருந்த மதுக்கடை ஒன்றை அதிகாரிகள் அங்குள்ள ஜெயந்திபூர் என்ற கிராமத்துக்கு இடம்மாற்றினர்.

இதை கண்டு ஆவேசமடைந்த உள்ளூர் பெண்கள் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள்.

மேலும் மதுபாட்டில்களை தெருவில் போட்டு அதற்கு தீ வைத்து கொளுத்தினர்.

இந்த செயலில் ஈடுபட்ட அந்த ஊர் பெண்கள் மீது பொலிசார் தற்போது வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments