சாப்பாடு இல்லை.. மணப்பெண்ணுக்கு தாலிகட்ட மறுத்த மாப்பிள்ளை: விநோத சம்பவம்

Report Print Santhan in இந்தியா

பெங்களூருவில் 50 பேருக்கு சாப்பாடு இல்லை என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை பாதியில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் கோணேனகுன்டேஹள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. அப்போதும் திடீரென்று மணமகன் வீட்டார் 50 பேருக்கு சாப்பாடு போதவில்லை.

இதை அறிந்த மணமகன் வீட்டார், பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதால் இன்று காலை நடக்க வேண்டிய முகூர்த்தம் நின்று போனது. இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இது குறித்து மணமகள் நந்தினியின் உறவினர் ஒருவர் கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே மாப்பிள்ளையான நாகபிரசாத்துக்கு, நந்தினி மீது விருப்பமில்லை. வரதட்சணையாக 100 கிராம் நகைகள் மற்றும் 10 லட்சம் செலவில் திருமண ஏற்பாடு செய்தோம்.

அதுமட்டுமின்றி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு 400 பேர் தான் வருவார்கள் என்று கூறினார். நாங்கள் அப்படி இருந்தும் 600 பேருக்கும் சமைத்திருந்தோம், ஆனால், அவர்கள் சார்பில் 700 பேருக்கு மேல் வந்திருந்தனர்.

இதனால், 50 பேருக்கு சாப்பாடு போதவில்லை. இந்த சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி, திருமணத்தையே நிறுத்திவிட்டனர் என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments