துடிதுடிக்க காதை கடித்து துப்பிய நபர்: அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ், இவர் அங்குள்ள பகுதியில் டீக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி குடிநீர் குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காத்திருந்தனர்.

அப்போது 10 குடங்களுடன் மகேந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது, ரங்கராஜ் வரிசையில் நிற்காமல் தண்ணீர் பிடிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்த கேட்டபோது, மகேந்திரனுக்கும், ரெங்கராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதால் இது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரெங்கராஜ், திடீரென மகேந்திரனின் காதை கடித்து துப்பினார்.

இதனால் துடிதுடித்த ராஜேந்திரன் இரத்தக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments