முதலமைச்சரின் தலைக்கு ரூ.11 லட்சம் விலை பேசிய நபர்

Report Print Arbin Arbin in இந்தியா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை துண்டித்து எடுத்து வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என அந்த மாநில பாஜக இளைஞரணி தலைவர் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியான பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பில் முக்கிய தலைவர்களில் ஒருவர் யோகேஷ் வர்ஷ்னே. இவர் கடந்த ஞாயிறு அன்று குறித்த அமைப்பால் நடத்தப்பட்ட ஹனுமான் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது முதலமைச்சர் பானர்ஜிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த யோகேஷ், மம்தா பானர்ஜியின் தலையை துண்டித்து எடுத்து வருபவர்களுக்கு தமது சொந்த பணத்தில் 11 லட்சம் சன்மானமாக அளிப்பதாக பேசியுள்ளார்.

மட்டுமின்றி மம்தா அரசு இந்துக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக பேசிய அவர், இதுபோன்ற அடக்குமுறைக்கு பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பு கடுமையான பதிலடி தர தயங்காது என எச்சரிக்கை விடுத்தார்.

யோகேஷின் இந்த அறைகூவல் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைடையே மத்திய அமைச்சர் ஒருவர் குறித்த எச்சரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாநில அரசு உடனடியாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த மம்தா அரசு, பாஜகவை பொறுத்த மட்டில் இது எப்போதும் நடக்கின்ற வாடிக்கை செயல் எனவும், அக்கட்சியின் பல்வேறு தலைவர்கள் தேர்தல் காலங்களில் இதுபோன்ற கொலை மிரட்டல்களை விடுத்திருப்பதாகவும் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments