கழிவறைகளை கழுவி 1,200 மாணவர்களைப் படிக்க வைத்த தமிழக தம்பதி: நெகிழ்ச்சியான சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கழிவறைகளை கழுவி சுமார் 1200 பள்ளி மாணவர்களை படிக்க வைத்துள்ள தமிழக தம்பதிகளின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், இவர் சிறிய லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.

இதைத் தொடர்ந்து அவர் வீடு வீடாக சென்று கழிவறைகளை சுத்தம் செய்து வருகிறார்.

லேத் பட்டறையிலிருந்து வரும் பணத்தை வீட்டிற்கும், கழிவறைகளை சுத்தம் செய்யும் போது கிடைக்கும் பணத்தை மாணவ, மாணவிகள் படிப்பதற்கும் கொடுத்து உதவி செய்து வருகிறார்.

இதுவரை 15 வருடங்களில் சுமார் 1200 மாணவ, மாணவிகளின் படிப்பிற்கு உதவியுள்ளார். ஒரு வீட்டிற்கு மாதம் ரூபாய் 400 பெறுகிறார்.

கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழை மாணவர்கள், படிக்க வசதியில்லாதவர்களை பள்ளியில் சேர்க்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெரியார், கக்கன், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள், எளிமையாக உயர்ந்த சிந்தனையுடன் வாழுங்கள் என அறிவுறுத்தினார்கள்.

இதனால் அவர்களின் கொள்கையை தான் கடைபிடிக்கிறேன், ஆரம்பத்தில் கழிவறை சுத்தம் செய்வது கடினமானதாகத்தான் இருந்தது, அதன் பின் பழகி விட்டது என்று கூறியுள்ளார்.

எனது மனைவியும் இதனை செய்கிறார், இருவரும் சேர்ந்து கிடைக்கும் பணத்தில் குழந்தைகளின் படிப்பிற்கு உதவுகிறோம், குழந்தைகளை அடையாளம் காண, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவியாக இருக்கிறது.

பணங்கள் அனைத்தும் வங்கி வழியாகவே செலுத்துகிறோம், அதனால் அனைத்திற்கும் தன்னிடம் கணக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments