நடிகர் கலாபவன்மணி மரண வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா
845Shares
845Shares
ibctamil.com

நடிகர் கலாபவன்மணியின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெமினி, எந்திரன், பாபநாசம் போன்ற பல திரைபடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கலாபவன் மணி.

இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி மர்மமான முறையில் அவரின் பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார்.

அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன, கொலை செய்யப்பட்டார் எனவும் வதந்திகள் பரவியது.

ஆனால் அவரின் மரணம் குறித்த உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வந்தனர்.

கலாபவன் மணி மரணத்தில் அதிக சந்தேகம் இருப்பதால் அதுகுறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அவர் குடும்பத்தார் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கலாபவன் மணி மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments