சரத்குமார், ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு! வருமானவரித்துறை பரபரப்பு தகவல்

Report Print Basu in இந்தியா

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்தும், நேற்று நடிகை ராதிகாவிற்கு சொந்தமான ராடம் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சரத்குமார், ராதிகா ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் ராடன் நிறுவனத்தில் ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரூ.4.97 கோடி வரியை செலுத்துவதாக சரத்குமார், ராதிகா ஒப்புதல் அளித்துள்ளதாக என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை ராதிகா கூறியதாவது, வருமான வரி துறையினர் விசாரணையில் என்னிடத்தில் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்பித்தேன். வரி ஏய்ப்பு செய்ததாக எந்த ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments