சிஆர்பிஎப் பொலிசாரை ஓட ஓட அடித்த கும்பல்! அதிர்ச்சி வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் சிஆர்பிஎப் என்னும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரரை ஒரு கும்பல் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

புத்கம் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடியில் பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர், வாக்குப்பதிவு முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினார். அப்போது ஒரு கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்தது.

கையில் துப்பாக்கி வைத்திருந்த போதும், தன்னைத் தாக்கிய கும்பல் மீது எந்த வித பதில் தாக்குதலும் நடத்தாமல் அந்த சிஆர்பிஎப் வீரர் அமைதியாகவே நடந்து சென்றார்.

தாக்குதல் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே அப்போது தனது நோக்கமாக இருந்தது என்று அந்த சிஆர்பிஎப் வீரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments