நிர்வாணமாக போராடிய விவசாயிகளுடன் மோடி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்

Report Print Raju Raju in இந்தியா

டெல்லியில் நிர்வாணாமாக போராடிய தமிழக விவசாயிகளுடன் பிரதமர் மோடி செல்பி எடுத்து கொண்டது போன்ற போட்டோ ஷாப் செய்யபட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்தியாவுக்கு மூன்று நாட்கள் அரசு சுற்றுபயணமாக வந்துள்ளார்.

புது டெல்லியில் இந்திய பிரதமர் மோடியுடன் மால்கம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

அப்போது அவர்கள் இருவரும் செல்பி எடுத்து கொண்டனர். இரயிலில் இருவரும் செல்பி எடுத்து கொண்ட பின்புறம் தமிழக விவசாயிகள் தரையில் உருண்டு போராடுவது, நிர்வாணமாக போராடுவது போன்ற விடயமும் செல்பியில் இருப்பது போன்று போட்டோ ஷாப் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அதே சமயத்தில் இரு பிரதமர்கள் பின்னால் பயணிகள் நிற்பது போலவும், அவர்கள் கை அசைப்பது போன்ற நிஜ புகைப்படமும் வெளியாகியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments